முருகதாஸ் கூட்டணியில் கமல் மற்றும் சிம்பு !

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல். ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னால் வெளியான படம் விக்ரம். இந்த படம் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி இருந்தது . விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறது ராஜ் கமல் நிறுவனம்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றி பெற்றதை முன்னிட்டு நடிகர் கமல் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் மூலம் நிறைய புதிய படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தயாரித்து வருகிறார். உதயநிநிதியை வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளார் .

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்புவை வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது . நடிகர் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதன் பிறகு டிசம்பர் மாதம் பத்து தல படம் வெளியாக இருக்கிறது. கமல் தயாரிக்கும் படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

Share.