தீபாவளி போட்டியில் தனுஷ்!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாறன். இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார் .

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற கதையில் நடித்து முடித்துள்ளார் தனுஷ் . தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ் . .

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 28 -ஆம் தேதி அன்று நானே வருவேன் படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. பிறகு நானே வருவேன் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது என்ற செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது இந்த படம் தீபாவளிக்கு நாளுக்கு தள்ளிப்போக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே தீபாவளி ரோஸில் நடிகர் கார்த்தியின் சர்தார் மற்றும் எஸ். கே நடித்துள்ள பிரின்ஸ் படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.