ஹீரோக்களுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா !

தமிழ் திரை உலகில் நீண்ட காலமாக முன்னணியில் உள்ள ஒரு நடிகை தான் நயன்தாரா . இவங்க இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனாங்க . இவங்களோட இரண்டாவது படத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடியா நடிச்சு அசத்தி இருந்தாங்க .

நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது . இதனை தொடர்ந்து கஜினி, பில்லா , வல்லவன் , ஈ , யாரடி நீ மோஹினி , என பல வெற்றி படங்களில் நடிச்சு ரசிகர்களை கவர்ந்தாங்க . நயன்தாராக்கு தனி ரசிகர்கள் பட்டாளமேதமிழ் திரை உலகில் இருக்கு.

பெரிய நட்சத்திர நடிகையா ஆனதும் ஹீரோக்கள் இல்லாமால் தன்னோட கதாபாத்திரத்துக்கு முதன்மை கொடுக்கும் படங்களில் நடிக்க ஆரம்பிச்சாங்க.அந்த மாதிரி இவங்க நடித்த படங்களும் தொடர்ந்து வெற்றியை பெற்றன . இந்த நிலையில் தமிழ் ஹீரோக்கள் அடிக்கடி சம்பளத்தை உயர்த்துவது போல் தற்பொழுது நடிகை நயன்தாரா அவரது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் .

அடுத்து விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் அஜித்குமார் படத்தில் நயன்தாரா தான் நடிக்க உள்ளார் இன்று செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கின்றனர் . இந்த படத்திற்கு நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருக்கிறார் என்றும் இதன் பின் நடிக்க இருக்கும் படங்களுக்கு 15 சம்பளம் கேட்பதகவும் தகவல் வெளியாகி இருக்கிறது .

Share.