அடுத்த நெல்சன் படத்திலும் நடிகர் விஜய் ! அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் பீஸ்ட் . இந்த படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகியது . இந்த படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து மற்றும் ஜாலி ஓ ஜிம்கானா போன்ற பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது .இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் திரைக்கு வந்தது ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை .பலரும் படத்தின் தோல்விக்கு நெல்சன் தான் காரணம் என்று தெரிவித்து வருகிறார்கள். இயக்குனர் நெல்சனை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் நெல்சனிடம் தொலைபேசியில் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பீஸ்ட் படத்தின் எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆறுதல் கூறிய விஜய் மேலும் இயக்குனர் நெல்சனுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்கிறேன் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளார் விஜய் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் பீஸ்ட் படத்தின் நடிகர் விஜயின் தலையீடு அதிகமாக இருந்தது என்றும் அதனால் தான் இயக்குனர் நெல்சன் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பெரிய நடிகர்களின் குறுக்கீடு படத்தில் இருக்கிறது நமக்கு பிடித்த மாதிரி படம் எடுப்பது என்பது நிச்சயம் நடக்காது என்று புலம்பி இருக்கிறார் . அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share.