தனுஷுடன் இணையும் முன்னணி நடிகை

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாறன். இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார் .

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற கதையில் நடித்து வருகிறார் தனுஷ் , இந்த படத்தை கலைப்புலி எஸ் .தாணு அவர்கள் தயாரிக்கிறார் . செல்வராகவன் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .

இந்த படத்திற்காக உடல் எடையை கூட்டி உள்ளார் தனுஷ் . மயக்கம் என்ன படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து உள்ளது .

நடிகர் தனுஷ் தற்பொழுது வாத்தி படப்பிடிப்பில் இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் பெயர் கேப்டன் மில்லர் . இந்நிலையில் அந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

Share.