நடிகர் கமலின் மாஸ்டர் பிளான் !

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் படக்குழு படத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தும் முயற்சியில் உள்ளனர் . பேன் இந்திய படமாக இந்த படம் உள்ளதால் படத்தினை வெளியாகும் அனைத்து மொழிகளிலும் விளம்பர படுத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் மூன்று பாடல்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .இந்நிலையில் பத்தல பத்தல என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது . வருகின்ற 15-ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது . இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த கமல் முடிவு செய்துள்ளார் . எனவே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் .

இதனால் இந்த விழாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

Share.