அயலான் படத்தை வெளியீட போகிறதா ராஜ் கமல் நிறுவனம் ?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் டான் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார் . S.J.சூர்யா இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . நடிகர் சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ளார் . பிரியங்கா மோகன் இந்த படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதனால் படத்தின் வசூலும் நன்றாக இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து நடிகர் கமலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்து முடித்து இருக்கிற படம் அயலான் . இந்த படத்தை இயக்கி இருப்பவர் நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் . ரகுல் ப்ரீத் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் .

அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது . டப்பிங் வேலைகளும் முடிந்துவிட்டது . இந்நிலையில் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது . இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் நன்றாக வசூல் செய்யும் காரணத்தினால் அவரது அயலான் படத்தை கமல் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட முயற்சி செய்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . இது தொடர்பான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது .

Share.