விக்ரமிற்கு ஜோடியாகும் விஜய் பட நாயகி !

இயக்குனர் பா .ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சார்பட்டா பரம்பரை .இந்த படத்தில் ஆர்யா , பசுபதி , ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . திரையரங்கில் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படம் அமேசான் ஓடிடி -யில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது .

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மகான் . இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் . பாபி சிம்ஹா , சிம்ரன் , துருவ் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் .
மகான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார் . கே.ஜி.எஃப்-ல் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இந்த படம் உருவாக இருக்கிறது . இந்நிலையில் படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது .

தற்போது இந்த படத்தில் இருந்து புதிய அப்டேட் கிடைத்துள்ளது . நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . விரைவில் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .

Share.