புஷ்பா 2 படத்தில் சமந்தா நடிக்கிறாரா?

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பான் இந்தியா படமாக வெளியானது புஷ்பா திரைப்படம் .இந்த திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி இருந்தார் .நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகவும் , நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நடித்து இருந்தனர் . மலையாள நடிகர் ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார் டி.ஸ்.பி.படத்தின் வெளியீட்டுக்கு பின் இந்த படத்தின் பின்னணி இசையை அனைவரும் வெகுவாக பாராட்டி இருந்தனர் . மேலும் இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன் வெளியான அனைத்து பாடல்களும் , அனைத்து மொழிகளிலும் மிக பெரிய வரவேற்பை பெற்றது . குறிப்பாக நடிகை சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடனமாடிய “ஊம் சொல்றியா மாமா” பாடல் சர்ச்சை ஆனது மட்டுமில்லாமல் , இணையத்தில் வைரலாகி ஹிட் அடித்தது . படத்தின் கதாநாயகி ராஷ்மிக்காவை காட்டிலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய சமந்தாவிற்கு மிக பெரிய வரவேற்பு இருந்தது.

புஷ்பா படத்தின் வெற்றிக்கு இந்த பாடல் மிக பெரிய காரணம் என்று கூறலாம் . இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது . இதை பற்றின அதிகார்வபூர்மான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.