பாலிவுட் வில்லனை இறக்குமதி செய்யும் வினோத் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது . தற்போது மஞ்சு வாரியர் நடிக்கும் காட்சிகளை எடுத்து வருகிறார் இயக்குனர் வினோத் . இந்நிலையில் இந்த படத்தை டிசம்பர் மாதம் திரையிடலாம் என்ற திட்டத்தில் படக்குழு இருக்கிறது .

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது . சில சண்டை காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டது வருகிறது . இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் சஞ்சய் டட் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .

Share.