சந்தானம் நடிக்கும் புதிய படம் !

தமிழ் சினிமாவின் காமெடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகர் சந்தானம் . இவர் தற்பொழுது கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார் . நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சபாபதி. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை .

இந்நிலையில் நடிகர் சந்தானம் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் குளு குளு என்கிற படத்தில் நடித்து முடித்து உள்ளார் . இதனை தொடர்ந்து கன்னடத்தில் ஹிட்டான லவ் குரு, கானா பஜானா, விசில், ஆகிய படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.பார் டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் இந்த படத்தை தயாரிக்கிறார் . மேலும் இந்த படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகி வருகிறது என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது .

Share.