முதல் முறையாக கார்த்திக்குடன் இணையும் பிரபல இயக்குனர் !

நடிகர் கார்த்தி தற்பொழுது சர்தார் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் . பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்குகிறார் .இந்த படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் நடிகை லைலா நீண்ட வருடங்களுக்கு இந்த படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் அதில் ஒன்றில் வயதான தோற்றத்தில் நடிக்கிறார் . இந்த படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது . 17 நாட்கள் இந்த படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் நடிகர் கார்த்தி சர்தார் படத்தில் நடித்த பிறகு அடுத்து நடிக்கும் படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது . இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்க இருக்கிறார் . பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது . மேலும் இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி முதலில் நடிக்க போவது நலன் குமாரசாமி இயக்கும் படம் தான் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது .இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. மேலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவலாக இருக்கிறது .

Share.