இந்தியன் 2 இணையும் மற்றொரு நாயகன் !!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் .

இந்நிலையில் நடிகர் கமல் அடுத்து மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க இருக்கிறார் . ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற செய்தி வெளியாகி இருந்தது .

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமலின் மார்க்கெட் உயர்ந்து உள்ளது . இதனை கருத்தில் கொண்டு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருக்கிறது லைக்கா நிறுவனம் என்ற செய்தி வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்தியன் 2 படத்தை தயாரிக்க இருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகி இருந்தது .

செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது . நடிகை காஜல் அகர்வால் மீண்டும் இந்தியன் 2 படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது . இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது சத்யராஜ் அவர்களும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

Share.