சிம்புவின் புதிய கூட்டணி !

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாநாடு. நீண்ட வருடம் கழித்து இந்த படம் சிம்புவிற்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவிற்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.அந்த வகையில் சிம்பு தற்பொழுது கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இதனை தொடர்ந்து பத்து தல படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கொரோனா குமார் என்கிற படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா பற்றின கதையை இப்பொழுது படமாக்கினால் மக்கள் மத்தியில் எடுபடுமா என்று சிம்பு நினைத்துள்ளார்.அந்த படத்தை கைவிட்டுவிட்டு இயக்குனர் லிங்குசாமி சொன்ன புதிய கதையில் நடிக்க திட்டமிட்டுள்ளார் சிம்பு.இந்த படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரிக்க உள்ளார்‌.

Share.