தலைவர் 169 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா ?

கோலமாவு கோகிலா , டாக்டர் போன்ற படங்களின் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக குறுகிய காலகட்டத்தில் மாறியவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் . டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார்.இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி வெளியாக இருக்கிறது .

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க உள்ளார். இந்த படம் ரஜினியின் 169-வது படமாக உருவாக இருக்கிறது .இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . பேட்ட படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு அனிருத் ரஜினிக்கு இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் சிவகார்த்திகேயன் நடிக்க போவதாக குறிப்பா ரஜினிக்கு மகனாக நடிக்க போவதா சினிமா வட்டாரங்களில் இருந்து இணையத்தில் செய்தி வெளியாகி கொண்டு இருக்கிறது . நடிகர் சிவகார்த்திகேயனை பொறுத்த வரையில் நடிகர் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர் . மேலும் இயக்குனர் நெல்சன் தீலிப்குமாரும் சிவகார்த்திகேயனும் நண்பர்கள். நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி இருந்தார் . நெல்சன் அடுத்து இயக்கிய டாக்டர் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்திலும் அரபிக் குத்து என்னும் பாடலை எழுதினார் சிவகார்த்திகேயன் . எனவே நெல்சன் இயக்கும் தலைவர் 169 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக வரும் தகவல் பெரும்பாலும் உண்மையாக தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது .

Share.