சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன் !

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டான் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து இருந்தார் . மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது.

டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது . இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ” எஸ்.கே 20 ” படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார் .காரைக்கால் , பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது சமீபத்தில் இந்த படத்திற்கு பிரின்ஸ் என்ற தலைப்பு வைத்தனர் . றது .

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படத்திற்கு மாவீரன் என்று தலைப்பு வைத்துள்ளனர் . டான் மற்றும் டாக்டர் ஆகிய படங்கள் நல்ல மிகப்பெரிய வெற்றி அடைந்த காரணத்தால் நடிகர் சிவகார்த்திகேயன் 50 சதவீதம் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள் .

Share.