மீண்டும் படம் இயக்குகிறாரா S.J.சூர்யா !

நடிகர் அஜித் நடிப்பில் 1999 வது வருடம் வெளியான வாலி படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் S.J. சூர்யா . வாலி படத்திற்கு பிறகு குஷி ,நியூ ,அன்பே ஆருயிரே ஆகிய படங்களை இயக்கி இருந்தார் S.J. சூர்யா. இயக்குனராக இருந்த இவர் நியூ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதன் பிறகு இவர் கதாநாயகனாக இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை .

இதனை தொடர்ந்து இவர் துணை கதாபாத்திரங்களிலும் , வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் . இதனால் இவர் படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார் . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் இசை . இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை .

இந்நிலையில் S.J. சூர்யா அடுத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . அந்த படத்தின் பெயர் கில்லர் என்று சொல்லப்படுகிறது . படத்தில் கார் தான் முக்கியமான இடத்தில் உள்ளது என்றும் அந்த கார் ஜெர்மனியிலிருந்து வர வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது . அந்த படத்தில் S.J. சூர்யா தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார் மேலும் அவருக்கு ஜோடியாக புது நாயகி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

Share.