மீண்டும் ஒரு உண்மை கதையில் நடிகர் சூர்யா!

கடந்த 2020ம் ஆண்டு சூர்யா தயாரித்து நடித்த படம் தான் சூரரைப் போற்று. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி இருந்தாங்க .அமேசான் ஓ.டி.டியில் இந்த படம் வெளியானது . அந்த வருடத்தோட மிகப்பெரிய வெற்றியை அந்த படம் பெற்றுச்சி . ஜி .வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இந்த படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது . ஆஸ்கார் நாமினேஷன் வரை சென்று இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்தது . பல வருடமாக சரியான வெற்றி படம் கொடுக்காமல் போராடிக்கொண்டு இருந்த நடிகர் சூர்யாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற படம்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைந்து சூர்யா ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதினர் . அதை உறுதி படைத்தும் வகையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் விரைவில் அந்த படம் தொடங்கும் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் .இந்தபடம் மிக பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளதாகவும் , உண்மை கதையை தழுவி எடுக்க உள்ளதாகவும் கூறி உள்ளார் . மேலும் இந்த படம் சூரரைப் போற்று படத்தை காட்டிலும் கடினமாக இருக்கும் என்று கூறி உள்ளார் . இதனால் சூரிய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சூரரைப் போற்று போலவே இந்த படம் பல விருதுகளை குவிக்கும் . இந்த முறை ஆஸ்கார் விருதை வெல்லும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Share.