சூர்யாவை வைத்து படம் தயாரிக்கிறதா கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ?

இந்திய சினிமாவில் இரண்டு மிக பெரிய பிரம்மாண்ட படமான கே.ஜி.எஃப் 1 மற்றும் ‘கே.ஜி.எஃப் 2 ஆகிய படத்தை தயாரித்த நிறுவனம் ஹோம்பலே நிறுவனம் . கன்னட தயாரிப்பு நிறுவனமான இந்த நிறுவனம் பிரபாஸ் நடித்து வரும் சாலார் படத்தையும் இவர்கள் தான் தயாரித்து வருகின்றனர் . கே.ஜி.எஃப் 1 ,‘கே.ஜி.எஃப் 2 போன்ற பிரமாண்ட படங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம் அடுத்து அவர்கள் தயாரிக்க இருக்க படம் பற்றின அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

இறுதிச்சுற்று , சூரரைப்போற்று போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா இந்த படத்தை இயக்க உள்ளார்.உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது .


சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் சுதா கொங்கரா அடுத்து அவர் சூரரை போற்று ஹிந்தி மொழியில் படமாக்க உள்ளார் . அதனை தொடர்ந்து ஒரு வெப் சீரிஸ் ஒன்றையும் , காதல் படத்தையும் எடுக்க உள்ளார்.இதனை தொடர்ந்து உண்மை சம்பவத்தை வைத்து ஒரு படம் தயாராக உள்ளது அதில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார் என்ற தகவலையும் பகிர்ந்து இருந்தார் .

இந்நிலையில் ஹோம்பலே நிறுவனம் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது . இந்த படம் நிச்சயம் பிரமாண்டமாக பான் இந்திய படமாக உருவாகும் என எதிர்பார்க்க படுகிறது .

Share.