தளபதி 66 படத்தின் அடுத்த அப்டேட் எப்பொழுது வரும்?

சன் பிக்சர்ஸ் தயாரிப்புல நடிகர் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்னதாகவே தளபதி66 படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

தளபதி 66 படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தாயரிக்கபோவதாகவும் , கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கிய ” வம்ஷி ” இயக்கப்போவதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் தளபதி விஜய் முதன் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார்.
மேலும் இந்த படத்தின் கதையை கேட்ட விஜய் கடந்து இருபது ஆண்டில் இப்படி ஒரு கதையை நான் கேட்டது இல்லை என்று வெகுவாக பாராட்டினார் என்று தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா, நடிக்க போவதாகவும், பின்பு தமன்னா நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. அதே சமயம் தளபதி 66 படத்தின் இசையமைப்பாளர் தமன் தான் என்ற செய்தியும் இணையத்தில் பரவி கொண்டுவருகிறது.

இந்த நிலையில் தளபதி 66 படத்தின்
டெஸ்ட் ஷுட் சில நாட்களுக்கு முன்பு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பீஸ்ட் படத்தின் வெளியீட்டுக்கு முன்பாகவே இந்த வார இறுதியில் தளபதி 66 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படப்பிடிப்பு தொடங்கிய பின் இந்த படத்தில் நடிப்பவர்கள் பற்றிய செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.