அரண்மனை 3 படத்தின் வசூல் எத்தனை கோடி ?

முறை மாமன் , முறை மாப்பிள்ளை , உள்ளத்தை அள்ளித்தா , அருனாச்சாலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி .இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அரண்மனை 3.இந்த படத்தில் ஆர்யா , ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா , சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். குஷ்பு சுந்தர் இந்த படத்தை தயாரித்து இருந்தார் . சி.சத்யா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .நடிகர் உதயநிதி இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டார்.

அரண்மனை 1 மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது . அரண்மனை 3 படத்தை கோடை 2021-ஆம் ஆண்டு திரையரங்கில் திரையிடலாம் என்ற முடிவில் படக்குழு இருந்தது . பின்பு இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது . ஆனால் வேறு சில காரணங்களால் மீண்டும் படம் தள்ளிப்போனது . பிறகு அக்டோபர் மாதம் ஆயுத பூஜை சமயத்தில் வெளியானது இந்த படம் .

அரண்மனை 3 படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருந்தது . இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் இருந்தாலும் முதல் 15 நாட்களில் நல்ல வசூல் செய்தது. மேலும் இந்த படத்தின் பட்ஜெட் 22 கோடி . அரண்மனை 3 வசூல் செய்தது 50 கோடி . எனவே இந்த படம் பெரிய வெற்றிப் படமாக சுந்தர்.சி அவர்களுக்கு அமைந்தது .

Share.