ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகிறதா இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது .

இந்நிலையில் நடிகர் கமல் அடுத்து மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க இருக்கிறார் . ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் பற்றி பேசி இருந்தார்

இந்நிலையில் இந்தியன் 02 மீண்டும் தொடங்குவதற்கு உதயநிதி தான் காரணம் என்றும் இந்தியன் 2 படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டி.வி-க்காக வாங்க உள்ளார் உதய். தமிழ்நாடு திரையரங்கு உரிமையும் உதயநிதியே வாங்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது . தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி தொடங்க இருக்கிறது . ஷங்கர் ராமச்சரன் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இந்தியன் 2 படப்பிடிப்பு என இரண்டையும் ஒரே சமயத்தில் இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த செய்தி 90 சதவீதம் உறுதியாகிவிட்டது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

Share.