விடுதலை படத்தின் மொத்த பட்ஜெட் இத்தனை கோடியா ?

விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கோ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்த கூட்டணியாக ரெட் ஜெயின்ட் மூவிஸ் & ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவன தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ட்ரெட் குமார் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தை வழங்குகிறார்கள். விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள இறுதிக்கட்டத்தை எட்டி, பரபரப்பாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

பிரமாண்டமாக உருவாகியுள்ள விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இத்திரைப்படம் ஏற்கனவே அதன் பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் திரை ஆர்வலர்களிடையே பெரிய அளவினில் அலைகளை உருவாக்கியுள்ளது. மேலும், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியீடு தற்போது பல திரைப்படங்களுக்கு வெற்றியின் முகவரியாக மாறியிருப்பதால், விடுதலை திரைப்படமும் பெரும் வெற்றியாக அமையுமென தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நம்புகிறார்.

இந்நிலையில் விடுதலை படம் தொடங்கும் போது படத்தின் பட்ஜெட் 4 கோடி இருந்தது ஆனால் தற்போது 40 கோடியாக உயர்ந்து உள்ளது . இதற்கு கதையில் ஏற்பட்ட சில மாறுதல் மற்றும் படப்பிடிப்பு இயற்கையினால் ஏற்படும் சில இடையூறு காரணமாக அதற்கு ஏற்றவாறு படப்பிடிப்பை வைப்பது போன்ற காரணத்தை இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார் .

Share.