AK 61 -இல் பாடல்கள் இல்லையா ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . வருகின்ற தீபாவளிக்கு இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிற தகவலும் வெளியாகி இருந்தது . இந்நிலையில் இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்ற செய்தி தற்பொழுது வெளியாகி இருக்கிறது .படத்தில் ஒரே ஒரு தீம் சாங் மட்டும் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது . படத்தின் விறுவிறுப்பிற்காக பாடல் இல்லாமால் சுவாரசியமாக எடுக்க உள்ளார் ஹச்.வினோத்.

Share.