விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தில் சிம்புவுக்கு பதில் இந்த நடிகரா ?

இயக்குனர் கௌதம் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் என்னை நோக்கி பாயும் தோட்டா . இவர் இயக்கிய துருவ நட்சத்திரம் , ஜோஷுவா இமை போல் காக்க போன்ற படங்கள் சில காரணங்களால் திரைக்கு வரவில்லை . இந்நிலையில் நடிகர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார் . இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது நடந்து வருகிறது .’விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .

மேலும் இயக்குனர் கவுதம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை தயார் செய்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது . அந்த கதையில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோரை நடிக்க வைக்கலாம் என்று விஜய் சேதுபதியிடம் பேசி உள்ளார் கௌதம் . ஆனால் விஜய் சேதுபதி அந்த கதையில் சிம்பு மற்றும் திரிஷா நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறி உள்ளார் . 96 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் ஜோடி நன்றாக இருந்த காரணத்தால் கௌதம் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் இருந்துள்ளார் . விஜய் சேதுபதி அதை மறுத்ததால் சிம்பு அந்த கதையில் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது .

Share.