தளபதி விஜய்க்கு நா.முத்துக்குமார் எழுதிய முதல் பாடல் ?

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயர்களில் ஒருவர் நடிகர் விஜய் . இவர் தென்னிந்திய சினிமாவிலும் முக்கியமான நடிகராக இருக்கிறார் . நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பீஸ்ட் .இந்த படம் எதிர்பார்த்த அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை.இந்நிலையில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது . பொதுவாக நடிகர் விஜய்யின் படங்களில் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் . அந்த வகையில் இவரின் படங்களுக்கு பாடல் எழுதியவர்களில் முக்கியமான கவிஞர்களில் ஒருவர் நா.முத்துக்குமார் .

நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் மிகவும் எளிதான வார்த்தைகளால் ரசிகர்கர்களின் மனதை கொள்ளை அடிக்க கூடிய திறன் கொண்டவை . இவரின் வரிகளுக்கு நிறைய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.பல விதமான தருணத்தில் இவரது வரிகள் நம் வாழ்க்கையோடு ஒத்துப்போகும் எளிதாக நம்மை ரசிக்க வைக்கும் .
எண்ணற்ற பாடல்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார் நா.முத்துக்குமார் .

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு இவர் எழுதிய முதல் பாடல் எது தெரியுமா ? 1999-வது ஆண்டில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் மின்சார கண்ணா . இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தவர் தேவா அவர்கள் . இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஒ அங்கிள் ஒ அங்கிள் ஒ அங்கிள் ஆண்ட்டி ‘ என்கிற பாடலை நடிகர் விஜய்க்கு முதன்முதலாக நா.முத்துக்குமார் எழுதிய பாடலாகும் .

Share.