டிமான்ட்டி காலனி 2 படத்தின் நாயகி யார் தெரியுமா ?

நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிமான்ட்டி காலனி. 2015-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்களில் முதல் படமாக அமைந்து இருந்தது .ரமேஷ் திலக் , M.S.பாஸ்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . தேனாண்டாள் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.இரண்டு கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருந்தது .

பேய் படமாக உருவாகி இருந்த இந்த டிமான்ட்டி காலனி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . குறிப்பாக சில காமெடி காட்சிகள் மிகவும் அற்புதமாக இருந்தது . தமிழ் சினிமாவில் முற்றிலும் புது விதமான பேய் படமாக இந்த படம் அமைந்தது இருந்தது .

இந்த நிலையில் டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் டிமான்ட்டி காலனி படம் வெளியாகி 7 வருடங்கள் நிறைவடைந்த நாளன்று டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் பற்றின அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருந்தது . இந்த படத்திலும் அருள்நிதி நடிக்க அஜய் ஞானமுத்து கதை மற்றும் திரைக்கதை எழுத அவரது துணை இயக்குனர் வெங்கி வேணுகோபால் இயக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது .

தற்போது இந்த படத்தின் நாயகி பற்றின தகவல் வெளியாகி இருக்கிறது .நடிகை பிரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .

Share.