கமலின் அடுத்து படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது .படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான பிறகும் நிறைய இடங்களில் திரையரங்கில் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து வருகின்றனர் . 400 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்து சாதனை செய்துள்ளது .

இந்நிலையில் நடிகர் கமல் அடுத்து மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க இருக்கிறார் . ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற செய்தி வெளியாகி இருந்தது .

தற்போது இந்த படத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது . படத்தின் இசையமைப்பாளராக அனிருத் அல்லது ரகுமான் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது இந்த படத்திற்கு இசையமைக்க பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . சமீபத்தில் வெளியான மின்னல் முரளி , குரூப் போன்ற படங்களுக்கு இவர் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது .

Share.