லெஜெண்ட் அடுத்து நடிக்கும் படத்தை தயாரிக்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் !

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அவரது கடைகளுக்கான விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார் . அதன் பிறகு இவர் அவரது தயாரிப்பில் ”தி லெஜண்ட்” என்கிற படத்தை தயாரித்து வருகிறார் . அந்த படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் . இந்த படத்தை நடிகர் அஜித் மற்றும் விக்ரமை உல்லாசம் என்கிற படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கிய ஜே.டி மற்றும் ஜெரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார் . இந்த படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி இருந்தது . மேலும் படத்தின் முதல் பாடல் மோசலு மொசுலு என்கிற பாடல் வெளியாகி இருந்தது .அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது .

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா, பிரபு, யோகி பாபு, நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘வாடிவாசல்’ பாடல் என்கிற பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது . மேலும் சில தினங்களுக்கு முன்
இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது . சரவணன் அருள் சண்டைக்காட்சிகளில் அனைவரையும் மிரட்டி உள்ளார் . ஷங்கர் படத்திற்கு இணையாக பிரமாண்டமாய் இந்த படம் காணப்படுகிறது .

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது . மேலும் படம் சுமாரான வசூலையும் பெற்றது . இந்நிலையில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .

Share.