விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இது தான் காரணமா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி , ஃபகத் பாசில் , காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பி பெற்றது . நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றது . விக்ரம் படத்திற்கு முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார் . இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை விட வில்லனாக நடிக்கும் படங்களில் அதிக சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் கோலிவுட்டில் உலா வருகிறது . இதன் காரணமாக தான் நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் வில்லனாக நடிக்க சம்மதிக்கிறார் என்று கூறப்படுகிறது . தற்போது புஷ்பா 2 மற்றும் ஜவான் படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .


இதனிடையே பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று விஜய் சேதுபதியை வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க வைக்க 35 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது . இதனால் விஜய் சேதுபதி காட்டில் மழை தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள் .

Share.