ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த ராஜமௌலி !

பாகுபலி 1 மற்றும் பாகுபலி 02 ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான படம் ரத்தம் ,ரணம் ,ரௌத்திரம் . இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் , ராம்சரண் , சமுத்திரக்கனி , அஜய் தேவ்கன் , ஆலியா , ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . தமிழ் தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது .குறிப்பாக வசூலிலும் இந்த படம் பல சாதனைகளை செய்துள்ளது .

முதல் நாளில் மட்டும் இந்த படம் 223 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. மேலும் வெளியான மூன்று நாட்களில் இந்த படம் 500 கோடி வசூலை செய்ததாகவும் தகவல் வெளியானது .வெளியான 16 நாட்களில் 1000 கோடி ரூபாயை இந்த படம் ஒட்டுமொத்தமாக வசூல் செய்து உள்ளது .

இந்நிலையில் இந்த படம் வெளியான 45 நாட்களுக்கு பிறகு இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் , தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இந்த படம் வருகின்ற மே 20-ஆம் தேதி முதல் ஜி 5 ஓடிடியில் ஸ்ட்ரீமாக உள்ளது . இந்த அறிவிப்பு ” ரத்தம் ,ரணம் ,ரௌத்திரம் ” படத்தின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது .

Share.