ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கதை இது தானா ?

இயக்குனர் ப.ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சார்பட்டா பரம்பரை .இந்த படத்தில் ஆர்யா , பசுபதி , ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . திரை அரங்கில் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படம் அமேசான் ஓடிடி தலத்தில் வெளியானது . படம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது .

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மகான் . இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் . பாபி சிம்ஹா , சிம்ரன் , துருவ் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது . மேலும் இந்த படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்க உள்ளதாகவும் அந்த படத்திற்கு மைதானம் என்ற தலைப்பை வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது . நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து முடித்து விட்டார்,கோப்ரா படத்திலும் நடித்து முடித்து விட்டார் எனவே வருகின்ற ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Share.