பழிவாங்க துடிக்கும் கீர்த்தி சுரேஷ் !

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தங்கையாக நடித்து இருந்தார் கீர்த்தி சுரேஷ் . மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களை ஏமாற்றியது . இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியாகும் சாணி காயிதம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது .

சாணி காயிதம் படத்தை ராக்கி படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கிறார். நடிகர் செல்வராகவன் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . இந்த படத்தின் கதை 1980களில் நடுக்கம் கதையை எடுத்து இருக்கிறார்கள் .ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது . மே 6ம் தேதி ஓடிடியில் இந்த படம் வெளியாகிறது.

இந்நிலையில் சாணி காகிதம் படத்தின் கதை பற்றி சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. கான்ஸ்டபிளாக பணி புரியும் கீர்த்தி சுரேஷ் தன் கணவர் மற்றும் 5 வயது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் அனைத்தையும் இழக்கும் கீர்த்தி சுரேஷ் அதற்கு காரணமானவர்களை செல்வராகவன் துணையுடன் பழிவாங்குவதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதை இது தான் என்று இதுவரை அதிகாரபூர்வமாக படக்குழு கூறவில்லை .ஆனால் படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது இது ஒரு பழிவாங்கும் கதையாக தான் இருக்கும் என்று தெரிகிறது . ரசிகர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புடன் இந்த படம் அடுத்த வெளியாகிறது . அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நிச்சயம் அசதி இருப்பார் எனவே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Share.