ஜெயிலர் படத்தில் இணைந்த யூடியூப் பிரபலம் !

ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து தனது அடுத்த படமான ‘ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் .நெல்சன் திலீப்குமார் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சில முக்கிய நட்சத்திர நடிகர்களுக்கு ‘ஜெயிலர்’ படத்திற்காக டெஸ்ட் லுக் சமீபத்தில் செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது.

ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் முழுப் பொறுப்பையும் நெல்சன் திலீப்குமாரிடம் ஒப்படைத்துள்ளார், மேலும் சில கதாபாத்திரங்களுக்கு அவர் விரும்பும் நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுக்க இயக்குநருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு , மலையாள நடிகர் விநாயகன் , தரமணி புகழ் வசந்த் ரவி ஆகியோர் ‘ஜெயிலர்’ படத்தின் மிக முக்கிய பாத்திரங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது . இந்நிலையில் பருத்திவீரன் படத்தில் சித்தப்பு என்கிற பாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் சரவணன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருந்தது .

இந்நிலையில் சமீபத்தில் தான் ஜெயிலர் படத்திலிருந்து ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது . அதன் பிறகு ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் லீக் ஆகி இருந்தது . தற்போது ரஜினியின் பேரனாக இந்த படத்தில் யூடியூப் மூலம் பிரபலமான ரித்விக் என்கிற சிறுவன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

Share.