அரசியலுக்கு வருகிறாரா திரிஷா ?

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் அரசியில் மற்றும் சினிமா இது இரண்டையும் பிரித்து பார்க்கவே முடியாது . தமிழ் நாட்டின் முதல்வர்களாக இருந்த அறிஞர் அண்ணா , எம்.ஜி.ஆர், கருணாநிதி , ஜெயலலிதா என இவர்கள் அனைவரும் சினிமா துறை சார்ந்தவர்கள் . இவர்கள் மட்டுமல்லாது பல காலகட்டங்களில் பல சினிமா நட்சத்திரங்கள் தங்களது அரசியில் நிலைப்பாட்டை ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
.நடிகர்கள் கமல்ஹாசன் , விஜயகாந்த் உள்ளிட்டோரும் அரசியல் கட்சி வைத்துள்ளனர் . குழ்பு , ராதிகா , விந்தியா என முன்னணி நடிகையாக இருந்தவர்களும் தமிழ்நாட்டின் முக்கியமான கட்சிகளில் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த பலர் அரசியலில் வெற்றி பெறுவதில்லை . நடிகர் கமல்ஹாசன் அவர்களை கூட மக்கள் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்கடித்தனர் . இருந்தாலும் பல சினிமா நட்சத்திரங்களுக்கு அரசியல் ஆசை குறைவதில்லை .

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா . இவர் சினிமா படங்களில் பெரிதாக நடிப்பது இல்லை . இவர் நடித்த ராங்கி திரைப்படம் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இருக்கிறது . இந்த நிலையில் நடிகை திரிஷா அரசியலுக்கு வர போகிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது . நடிகை திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது .

Share.