ஒரே நாளில் விஜய் மற்றும் அஜித் படமா ?

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13- ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய்‌ இயக்குனர் வம்சி இயக்கத்தில்
” தளபதி 66 ” படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்த்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்காக சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின்‌ படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் இறுத்திக்குள் முடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள் படக்குழுவினர். படத்தை வருகின்ற தீபாவளிக்கு வெளியீடலாம் என்ற முடிவில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

ஏற்கனவே அஜித் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் ” AK 61 ” படத்தையும் தீபாவளிக்கு திரையிடலாம் என்கிற முடிவில் உள்ளனர். இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய் அஜித் படங்கள
வெளியாகலாம் என்று கூறப்படுகிறது .

Share.