விஜய் ரசிகர்கள் திரையரங்கிற்கு தீ வைத்தார்களா ?

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிய படம் பீஸ்ட் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . உலகம் முழுவதும் வெளியாகிய இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .

விஜய் ரசிகர்கள் பலரும் படத்தை பார்த்து விட்டு படம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறி வருகிறார்கள் .
இந்நிலையில் மதுரை உள்ள திரை அரங்கில் பீஸ்ட் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் அவர்களுக்கு ஏமாற்றம் தந்ததால் அந்த திரை அரங்கிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது . இந்த விடீயோவை நடிகர் அஜித் ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் .

இந்நிலையில் திரை தீப்பிடிக்கும் என்ற பீஸ்ட் பட பாடலை சுட்டி காட்டி அப்போ புரியல இப்போ புரியுது என கமெண்ட் செய்து வருகின்றனர் . மேலும் சிலர் அது திரை அரங்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அங்கு நெருப்பு பற்றியது என்றும் கூறுகிறார்கள் .விஜய் ரசிகர்கள் நெருப்பு வைக்கவில்லை என்று கூறுகிறார்கள் ஆனால் இதுவரை அங்கு நெருப்பு எப்படி பரவியது என்ற காரணத்தை இது வரை திரையரங்கு நிறுவனம் வெளியிடவில்லை .

Share.