அஜித் படத்தில் விஜய் சேதுபதி வில்லனா! விக்னேஷ் சிவன் சொன்னது என்ன தெரியுமா ?

தமிழ் சினிமாவில் போடா போடி என்கிற படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன் . இந்த படத்தில் சிம்பு மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்து இருந்தனர் . இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்கிற படத்தில் நடித்தார் . இந்த படத்தை தொடர்ந்து நானும் ரவுடி தான் என்கிற படத்தை இயக்கி இருந்தார் . விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்கிற படத்தை எடுத்தார் .
அதன் பிறகு அவர் இயக்கி உள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல் . இந்த படத்தில் விஜய் சேதுபதி , நயன்தாரா , மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர் . மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது . ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் . இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது . நடிகர் அஜித் தற்பொழுது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார் . இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பாரா என்ற கேள்விக்கு , எனது ஹீரோக்களை நான் வில்லனாக்குவதில்லை என்று கூறியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதி அஜித்துக்கு வில்லனாக நடிக்கவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது .

Share.