சிவகார்த்திகேயனுக்கு வில்லன் விஜய் சேதுபதியா ?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டான் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து இருந்தார் . மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது.

டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது . இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ” பிரின்ஸ் ” படத்தில் நடிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.காரைக்கால் , பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது . வருகின்ற தீபாவளிக்கு இந்த படம் வெளியாக இருக்கிறது .

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தின் தலைப்பு மாவீரன் என்று அறிவித்து இருந்தனர் . தற்போது இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார் எனவே இந்த படத்திலும் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

Share.