சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கிறாரா ?

தமிழ் சினிமாவிற்கு பல நல்ல திரைப்படங்களையும் பல சிறந்த இயக்குனர்களையும் தந்த தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் . சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் RB சௌத்ரி . தமிழ் ,தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி என பல மொழிகளில் படங்களை தயாரித்துள்ளார் . சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 50-வது படத்தில் RB சௌத்ரி அவர்களின் மகன் ஜீவா அறிமுகம் ஆகியிருந்தார் . அந்த படத்தின் பெயர் ஆசை ஆசையாய் . இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது .


இந்நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் 100வது படத்தை எடுப்பதற்கான முயற்சியில் இருக்கிறார்
RB சௌத்ரி . அந்த 100வது படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்கும் முயற்சியில் RB சௌத்ரி ஈடுபட்டுள்ளார் . நடிகர் விஜய்யை சந்தித்து இது தொடர்பாக பேசி உள்ளதாகவும் , நடிகர் விஜய் அதற்கு சம்மதித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த படம் அடுத்த வருடம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

நடிகர் விஜய் சூப்பர் குட் பிலிம்ஸ் கடைசியாக நடித்த படம் ஜில்லா . இந்த படத்தில் மோகன் லால் அவர்களும் நடித்து இருந்தார் . இந்த படம் நல்ல வெற்றியை பெற்று பெற்றது குறிப்பிடத்தக்கது .

Share.