மீண்டும் ரஜினியுடன் இணையும் யோகி பாபு !

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படத்தை தயாரிக்க உள்ளதாகவும், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அந்த படத்தை இயக்கு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் அடிக்கடி ரஜினிகாந்தை சந்தித்து கதை பற்றின விவாதத்தில் இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

மேலும் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ்ராஜ்குமார் தலைவர் 169 படமான ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . இதை ஷிவ்ராஜ்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் . இந்நிலையில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருந்த கோலமாவு கோகிலா , டாக்டர் , பீஸ்ட் ஆகிய மூன்று படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார் . அந்த வகையில் ஜெயிலர் படத்திலும் யோகி பாபுவிற்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் என்று நம்பப்படுகிறது .

Share.