சுந்தரா டிராவல்ஸ் பார்ட் 2 படத்தின் நாயகன் யார் தெரியுமா ?

சுந்தரா டிராவல்ஸ் படம் 2002 ஆம் ஆண்டு அசோகன் இயக்கிய நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் முரளி, ராதா, வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். வாசு, சபிதா ஆனந்த், வினு சக்ரவர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்து இருந்தனர் . கோவிந்த் பத்மன் மற்றும் மகேஷ் மித்ரா ஆகியோரால் எழுதப்பட்டது, இது அவர்களின் மலையாளப் படமான ஈ பரக்கும் தளிகாவின் (2001) ரீமேக் ஆகும். பரணி இசையமைத்து இருந்தார் மேலும் பி.சி.மோகனன் படத்தொகுப்பு செய்து இருந்தார் .

சுந்தர டிராவல்ஸ் படத்தில் வடிவேலு மற்றும் முரளி நடித்த நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது . மேலும் படத்தில் உள்ள பஸ் , எலி உள்ளிட்டவையும் படத்திற்கு கூடுதல் பலம் தந்தது. வடிவேலுவின் திரை பயணத்தில் இந்த முக்கியமான படமாக அமைந்தது .


இந்நிலையில் சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . சுந்தரா டிராவல்ஸ் படத்தை தயாரித்த எஸ்.வி.தங்கராஜ் தான் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் .மேலும் யோகி பாபு , கருணாகரன் முக்கிய பாத்திரங்களில் நடிக்க உள்ளனர் . இந்த பாகத்தில் குரங்கு , பாம்பு , நாய் உள்ளிட்ட உயிர் இனங்களும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது மேலும் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வந்து பேருந்தும் இந்த படத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது .

Share.