கமல் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் ? என்ன காரணம் தெரியுமா ?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் படக்குழு படத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தும் முயற்சியில் உள்ளனர் . பேன் இந்திய படமாக இந்த படம் உள்ளதால் படத்தினை வெளியாகும் அனைத்து மொழிகளிலும் விளம்பர படுத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் மூன்று பாடல்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .இந்நிலையில் பத்தல பத்தல என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . ஆனாலும் இந்த பாடலில் சில வரிகள் ஒன்றிய அரசை விமர்சிப்பது போல் அமைந்து இருக்கிறது . இதனால் பத்தல பத்தல பாடலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது . இதனால் நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகி இருக்கிறது . அந்த புகார் மனுவில், கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் வரும் ‘பத்தல பத்தல’ என்ற பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ளது எனவே அந்த வரிகளை நீக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது .

Share.