அடேங்கப்பா… ‘இவன் வேற மாதிரி’ பட நடிகை சுரபியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சுரபி. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே விக்ரம் பிரபு கூட தான். அது தான் ‘இவன் வேற மாதிரி’. இந்த படத்தை இயக்குநர் லிங்குசாமி தயாரிக்க, இயக்குநர் சரவணன் இயக்கியிருந்தார். இப்படத்தில் சுரபியின் சூப்பரான நடிப்பு ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தது.

‘இவன் வேற மாதிரி’ படத்துக்கு பிறகு நடிகை சுரபிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் மொழியில் ‘வேலையில்லா பட்டதாரி, புகழ்’, தெலுங்கு மொழியில் ‘பீருவா, எக்ஸ்பிரஸ் ராஜா, அட்டாக், ஜென்டில் மேன், ஒக்க க்ஷணம், வோட்டர்’ என படங்கள் குவிந்தது.

இப்போது சுரபி தமிழில் நடித்திருக்கும் புதிய படம் ‘அடங்காதே’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இதனை சண்முகம் முத்துச்சாமி இயக்கியிருக்கிறார். இந்நிலையில், நடிகை சுரபியின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.