‘ஜகமே தந்திரம்’ பட ஹீரோயின் ஐஸ்வர்யாவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

மலையாள சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே விஷாலுடன் தான். அது தான் ‘ஆக்ஷன்’. ‘ஆக்ஷன்’ படத்துக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, இயக்குநர் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’ என இரண்டு தமிழ் படங்கள் இணைந்தது.

இதில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. ‘ஜகமே தந்திரம்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை வருகிற ஜூன் மாதம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

சமீபத்தில் வெளியான இதன் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மியின் ரசிகர்கள் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)

Share.