தனுஷின் ‘ஜகமே தந்திரம்’… வெளியானது ‘ரகிட ரகிட’ பாடல் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 12 படங்கள் லைன் அப்பில் இருந்தது

இதில் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ரிலீஸுக்காக தனுஷின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கடந்த ஜூன் 18-ஆம் தேதி இப்படம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், பொலிஸ், போர்ச்சுகீஸ், பிரேசிலியன், ஸ்பானிஷ் (கேஸ்டிலியன்), ஸ்பானிஷ் (நியூட்ரல்), தாய், இந்தோனேஷியன், வியட்நாமிஸ் என 17 மொழிகளில் ரிலீஸ் ஆனது.

Jagame Thandhiram Rakita Rakita Video Song1

பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், சஞ்சனா நடராஜன் நடித்திருந்தனர். தற்போது, இந்த படத்தின் ‘ரகிட ரகிட’ பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.