‘ஜெய் பீம்’ லிஜோமோல் ஜோஸா இது?… புதிய போட்டோஷூட்டிற்கு குவியும் லைக்ஸ்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் லிஜோமோல் ஜோஸ். இவருக்கு அமைந்த முதல் படமே மலையாள மொழியில் தான் அமைந்தது. அது தான் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. இதில் ஹீரோவாக ஃபஹத் ஃபாசில் நடித்திருந்தார். இயக்குநர் திலீஸ் போத்தன் இயக்கியிருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை லிஜோமோல் ஜோஸுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன், ஹனி பீ 2.5, ஸ்ட்ரீட் லைட்ஸ், ப்ரேமசூத்ரம், ஒட்டகொரு காமுகன்’ என மலையாள மொழி படங்கள் குவிந்தது. இதனைத் தொடர்ந்து லிஜோமோல் ஜோஸுக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’.

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்துக்கு பிறகு ‘தீதும் நன்றும்’ என்ற தமிழ் படத்தில் நடித்தார். சமீபத்தில், லிஜோமோல் ஜோஸ் நடித்த புதிய தமிழ் படமான ‘ஜெய் பீம்’ பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது. சூர்யா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் ‘செங்கனி’ என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் லிஜோமோல் ஜோஸ். தற்போது, லிஜோமோல் ஜோஸின் அசத்தலான புதிய ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.