வெளியாகிய “ஜெயில்” படத்தின் அடுத்த சிங்கிள்!

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ் குமார் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “ஜெயில்”. இந்த படத்தின் ஒரு பாடலை நடிகர் தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி பாடியுள்ளனர். “காத்தோட காத்தானேன்” என்ற இந்த பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன் ஆகிய வெற்றி படங்களை தந்த இயக்குனர் வசந்தபாலன் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் “ஜெயில்”. தன்னோடு பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரை நடிகராக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ஜி.வி க்கு ஜோடியாக எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்நிதி நடித்துள்ளார்.

கிரிக்கீஸ் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. 2019ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்ற நிலையில், 2020ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா லாக்டோன் காரணமாக இதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்தப் படத்தில் யோகிபாபு, ரோபோ சங்கர், ராதிகா சரத்குமார், சுதன்சு பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “காத்தோட காத்தானேன்” ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த சிங்கிள் “பத்து காசு” தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் புள்ளைங்கோகளுக்காக என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

Share.