ஜெயிலர் படம் தொடங்கியது !

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படத்தை தயாரிக்க உள்ளதாகவும், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அந்த படத்தை இயக்கு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் அடிக்கடி ரஜினிகாந்தை சந்தித்து கதை பற்றின விவாதத்தில் இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.மேலும் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ்ராஜ்குமார் தலைவர் 169 படமான ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . இதை ஷிவ்ராஜ்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் . இந்நிலையில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதற்கான செட் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் இப்படத்தின் பல காட்சிகள் ஜெயிலில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கான ஜெயில் செட் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share.