அந்த இடத்தில் டாட்டூ குத்தியிருக்கும் ஜனனி… அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஜனனி ஐயர். இவருக்கு ஹீரோயினாக அமைந்த முதல் படத்திலையே போலீஸ் கதாபாத்திரத்தில் வலம் வந்து மாஸ் காட்டினார். அது தான் இயக்குநர் பாலா இயக்கிய ‘அவன் இவன்’ திரைப்படம். அதன் பிறகு அசோக் செல்வனின் த்ரில்லர் படமான ‘தெகிடி’யில் ‘மதுஸ்ரீ’ என்ற ரோலில் நடித்து ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தார்.

‘தெகிடி’ படத்துக்கு பிறகு நடிகை ஜனனி ஐயருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா’ என படங்கள் குவிந்தது. ஜனனி ஐயர் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மொழியிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

Janani Iyer's Hand Tattoo Meaning1

இப்போது, நடிகை ஜனனி ஐயர் நடிப்பில் தமிழில் பிரபு தேவாவின் ‘பஹீரா’, அசோக் செல்வனின் ‘வேழம்’, அஷ்வினின் ‘தொலைக்காட்சி’, இயக்குநர் சிம்பு தேவனின் ‘கசட தபற’, பரத்தின் ‘யாக்கை திரி, முன்னறிவான்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை ஜனனி ஐயர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் “உங்கள் கையில் குத்தியிருக்கும் டாட்டூவுக்கு என்ன அர்த்தம்?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ஜனனி “1.Double Happiness, 2.Goodluck, 3.Prosperity” என்று கூறியுள்ளார்.

Share.